காஞ்சிபுரத்தில் வழக்குரைஞர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம், டிச.20:
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் சட்டமேதை அம்பேத்கரை இழிவாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் லாயர்ஸ் அசோசியேஷன், பார் அசோசியேஷன், வழக்குரைஞர்கள் சங்கம் ஆகிய வழக்குரைஞர்கள் சங்கங்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கே.நேரு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் சி.சங்கர், டி.ஸ்ரீதர், மதுசூதனன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.நிறைவாக கட்சியின் நிர்வாகி இ.முத்துக்குமார் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து வைத்து பேசினார்.
No comments
Thank you for your comments