Breaking News

காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கான பயிலரங்கம்

காஞ்சிபுரம், டிச.20:

காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கி தலைமை அலுவலக கூட்ட அரங்கில் கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.



கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆ.க.சிவமலர் தலைமை வகித்து பயிலரங்கை தொடக்கி வைத்து பேசினார்.

வங்கியின் பொதுமேலாளர்கள் த.சீனிவாசன், ராஜ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவிப் பொதுமேலாளர் செல்வம் வரவேற்று பேசினார்.

வங்கிகளின் வராக்கடன்களை சர்பாசி சட்டத்தின் மூலம் வசூலிக்கும் நுட்பங்கள் என்ற தலைப்பில் வழக்குரைஞர் எஸ். கிருஷ்ணமூர்த்தியும், சைபர் குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்து பயிற்சியாளர் சி.மயில்வாகணனும் பயிற்சியளித்தனர்.

உதவிப் பொதுமேலாளர் த.செல்வம் நன்றி கூறினார். பயிலங்கில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் 94 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கி அலுவலர்கள் செய்திருந்தனர்.

No comments

Thank you for your comments