Breaking News

பைக் டாக்ஸி அசோசியேஷன் உறுப்பினர்கள் மாநகர காவல் ஆணையரிடம் மனு!

கோவை மாநகர காவல் ஆணையரிடம் பைக் டாக்ஸி அசோசியேஷன் உறுப்பினர்கள் ஒரு முக்கியமான மனுவை அளித்துள்ளனர் ரேபிட்டோ செயலி மூலம் பைக் டாக்ஸி ஓட்டும் நபர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகவும், இதிலிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்,குறிப்பாக ரயில் நிலையம், காந்திபுரம்,குனியமுத்தூர் போன்ற இடங்களில் இந்த பிரச்சனை அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் மட்டுமல்லாமல் அவர்களின் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் ஆட்டோ ஓட்டுநர்களின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பைக் டாக்ஸி அசோசியேஷன் உறுப்பினர் பேசுகையில் அகமது இது குறித்து பேசுகையில், "வாடிக்கையாளர்கள் செயலி மூலம் பைக் டாக்ஸியை புக் செய்கின்றனர். அவர்களை அழைக்க வரும்போது ஆட்டோ ஸ்டாண்ட் அருகே இருந்தால் சிறிது தூரம் தள்ளி வருமாறு அறிவுறுத்துகிறோம்.ஆனால் அப்போதும் வாடிக்கையாளர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் மிரட்டுகிறார்கள்" என்று தெரிவித்தார். மேலும் வாடிக்கையாளர் களை அழைத்துச் செல்லும் போது எங்களது வாகனங்களை வழிமறித்து உறுமியபடி பேசி மிரட்டுகிறார்கள். இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர்களிடமிருந்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.இந்த பிரச்சனை தொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பைக் டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் இடையேயான இந்த முரண்பாடு தீர்க்கப்பட்டால்,பொதுமக்களின் போக்குவரத்து தேவைகள் சிறப்பாக பூர்த்தி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments