மேஜிக் பீஸ்ட்-2024 தேசிய அளவிலான போட்டி!
கோவை மாவட்டம் நல்லாயன் சமூக கூடத்தில் இந்திய மாயாஜால பொழுதுபோக்கு சங்கத்தின் சார்பாக மேஜிக் பீஸ்ட்-2024 என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கும், ஜூனியர்- சீனியர் மெஜிசியன்களான தேசிய அளவிலான போட்டிகளும் நடைபெற்றது இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கனகலட்சுமி டைமண்ட்ஸ் முரளி,ACP முருகேசன் உக்கடம்,அசிஸ்டன்ட் கமிஷனர் ஆப் போலீஸ் சேகர்,காவல் ஆய்வாளர் ஆனந்த ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் இந்தியாவில் இருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா டெல்லி, கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட மேஜிசியன்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகைகளும்,அப்பாதுரை நினைவு மற்றும் சூப்பர் செல்வம் நினைவு கோப்பைகளையும்,இந்திய மாயாஜால சங்கத்தின் தலைவர் நந்தகுமார்,பொதுச் செயலாளர் பிரகாஷ் சவுக்கூர் மற்றும் பொருளாளர் மிருணாளினி அமர் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.
மேஜிசியன்களுக்குக்கான போட்டியில் சீனியர் பிரிவில் முதலில் சென்று சரவணன் முதல் பரிசை வென்றார். ஜூனியர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த சித்தார்த் முதலிடத்தையும், சென்னை சேர்ந்த ஆதிரா யாதவ் இரண்டாம் இடத்தையும்,கோவையைச் சேர்ந்த சுவாதிக் மூன்றாம் இடத்தில் வென்றார் போட்டியில் பிரிவில் மேலும் மாலையில் புகழ்பெற்ற மெஜிசியன் களின் மேஜிக் சோ நடைபெற்றது. பார்வையாளர்களின் கண்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது இந்நிகழ்ச்சியில் ஐஎம்ஹெச்ஏ சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொது மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments