காஞ்சிபுரத்தில் அரசு சுகாதாரத்துறை பெண் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் எம்.பவானி தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் எம்.மங்கலம்,மாவட்ட பொருளாளர் ஆர்.வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கற்பகம் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணிச்சுமை, மன அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்,
கூடுதல் துணை மைய பொறுப்பு பணிகளை பார்ப்பதற்கு நிர்ப்பந்தம் கொடுப்பதை கைவிட வேண்டும்,தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான அறிக்கைகள், காணொலிக் கூட்டங்களை முறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சுமதி உட்பட நகர மற்றும் கிராமப்புற செவிலியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.நிறைவில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து மனு அளித்தனர்.

No comments
Thank you for your comments