காஞ்சிபுரத்தில் மருத்துவர்கள் மக்கள் மன்றம் உதயம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மருத்துவர்கள் மக்கள் மன்றத்தின் 5 வது கிளை உருவாக்கப்பட்டது.இதன் தொடக்க விழாவிற்கு இந்திய மருத்துவக் கழக தமிழ் மாநில தலைவர் கே.எம்.அபுல்ஹசன் தலைமை வகித்தார்.வடக்கு மண்டல தலைவர் ச.காசி முன்னிலை வகித்தார்.காஞ்சிபுரம் கிளையின் தலைவர் எஸ். மனோகரன் வரவேற்று பேசினார்.
மருத்துவர்களுக்கும்,மக்களுக்கும் இடையே நல்லுறவு ஏற்படுத்துதல்,தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்துதல்,சமூக ஊடகங்களில் பரவும் தவறான மருத்துவச் சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்களுக்கு மாதம் தோறும் கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் கலந்து கொண்டு பேசுகையில் மருத்துவர்கள் தங்களது மருத்துவப் பணியுடன் குடும்பத்தினரோடும் நேரத்தை செலவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் மருத்துவக் கழகத்தின் நவம்பர் மாத இதழை வெளியிட அதனை கழகத்தின் மாநில தலைவர் கே.எம்.அபுல்ஹசன் பெற்றுக் கொண்டார்.
கூட்டத்தில் சமூக நல வாரிய முன்னாள் தலைவர் செம்பா.லட்சுமி வெங்கடாசலம்,சுழற் சங்க நிர்வாகிகள் பிரகாஷ், வ.மகேஷ்,அரிமா சங்க நிர்வாகி சங்கரன்,மூத்த வழக்குரைஞர் ஞானசம்பந்தம், கைவினைஞர்கள் சங்க தலைவர் எம்.அசோக், ஜவுளிக்கடை வியாபாரிகள் சங்க முன்னால் செயலாளர் ஆ.பழனி ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டு கருத்துக்களை பகிரிந்து கொண்டனர்.
நிறைவாக சங்க செயலாளர் கா.சு.தன்யக்குமார் நன்றி கூறினார்.கூட்டத்தில் இந்திய மருத்துவ கழக நிர்வாகிகள்உறுப்பினர்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments