Breaking News

ரூ.4 ஆயிரம் லஞ்சம் - காஞ்சிபுரம் அருகே மின்வாரிய உதவிப் பொறியாளர் உட்பட இருவர் கைது

காஞ்சிபுரம், நவ.29:

மின் இணைப்பை இடமாறுதல் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக காஞ்சிபுரம் அருகே தாமல் மின்வாரிய உதவிப் பொறியாளர் மற்றும் கம்பியாளர் இருவரும் வெள்ளிக்கிழமை லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தினை சேர்ந்தவர் பிரபாகர்(28)இவர் தந்தை பெயரில் உள்ள மின் இணைப்பை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக மின்கட்டணத் தொகை ரூ.1150-ஐ இணையம் வாயிலாக செலுத்தியுள்ளார்.

இதன் பின்னர் தாமல் மின்வாரிய உதவிப் பொறியாளர் அசோக்ராஜை அணுகிய போது அவர் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும் அதை கம்பியாளர் சாந்தமூர்த்தியிடம் வழங்குமாறும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பிரபாகர் லஞ்ச ஒழிப்புக் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.புகாரின் அடிப்படையில் கம்பியாளர் சாந்தமூர்த்தியிடம் பிரபாகர் ரூ.4 ஆயிரத்தை லஞ்சமாக வழங்கிய போது அப்பகுதியில் மறைவாக நின்று கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் சாந்தமூர்த்தியையும்,உதவிப் பொறியாளர் அசோக்ராஜையும் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி வே.கலைச்செல்வன் தலைமையிலான போலீஸார் கம்பியாளர் சாந்தமூர்த்தியிடம் ரசயாணம் தடவிய ரூ.4000 மதிப்பிலான நோட்டுகள் இருந்ததையும் பறிமுதல் செய்ததுடன் இருவரையும் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

No comments

Thank you for your comments