காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.57.36 லட்சம்
காஞ்சிபுரம், டிச.19:
மகாசக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வருவது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில்.இக்கோயிலில் இருந்த இரு உண்டியல்கள் 56 நாட்களுக்குப் பிறகு திறந்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.57,36,782 இருந்தது. தங்கம் 178 கிராமும்,வெள்ளி 611கிராமும் இருந்தன.
உண்டியல்கள் திறந்து எண்ணும் பணியினை அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையர் ஆர்.கார்த்திகேயன்,செயல் அலுவலர் ச.சீனிவாசன், கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயர், மணியக்காரர் சூரியநாராயணன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
கோயில் பணியாளர்கள் மற்றும் ஆன்மீக சேவகர்கள் பலரும் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
No comments
Thank you for your comments