பூந்தமல்லி நகராட்சியில் தூய்மைப் பணிகள் தீவிரம் - தலைவர் ஆணையாளர் ஆய்வு
பூந்தமல்லி :
தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை செயல்படுத்தும் பொருட்டு பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர தூய்மைப்பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை குறித்தும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பூந்தமல்லி நகராட்சியை தூய்மையான நகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 2-ஆவது வார்டிலுள்ள அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள குப்பைகளை அகற்றி, கழிவறைகளை சுத்தம் செய்து சீரமைத்து பராமரிக்கும் தீவிர தூய்மைப் பணிகள் புதன்கிழமை நடைபெற்றன. இப்பணிகளை
நகரமன்றத்தலைவர் காஞ்சனா சுதாகர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டு அறிந்ததுடன், தரமான முறையில் சீரமைக்கவும், விரைந்து பணிகளை முடிக்கவும் தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்வில் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, துப்புரவு அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments