Breaking News

இன்றைய (27-12-2024) ராசி பலன்கள்




மேஷம் (Mesham)- Aries

புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். வரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபார முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். நிம்மதி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : அறிமுகம் உண்டாகும்.

பரணி : இழுபறிகள் மறையும்.

கிருத்திகை : சிந்தித்துச் செயல்படவும்.

 

 

ரிஷபம் (Rishabam) -Taurus

உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நெருக்கடியாக இருந்துவந்த சிக்கல்கள் குறையும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் மேம்படும். சிந்தனைப்போக்கில் சில மாற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் துரிதமும், வேகமும் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை :  வடமேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

கிருத்திகை : ஒத்துழைப்பான நாள்.

ரோகிணி : சிக்கல்கள் குறையும்.

மிருகசீரிஷம் : துரிதம் உண்டாகும்.

 

 

 


மிதுனம் (Mithunam) -Gemini

சகோதர வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வருமான வாய்ப்பு மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். அறிவுத்திறனை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தகவல் தொடர்பு துறையில் லாபம் உண்டாகும். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும். நாவல் விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள். 

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம் 

மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு உண்டாகும்.

திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.

 

 


கடகம் (Kadagam) - Cancer 

உறவினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். விவசாயப் பணிகளில் ஆதாயம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். பெரியவர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். அரசு உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். வெற்றி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

புனர்பூசம் : ஒத்துழைப்பு மேம்படும்.

பூசம் : அனுகூலமான நாள்.

ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.

 

 


சிம்மம் (Simmam) -Leo 

நண்பர்கள் வழியில் அனுகூலம் கிடைக்கும். வீடு தொடர்பான சிறு பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். தாயின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். பொழுதுபோக்கு விசயங்களில் ஆர்வம் ஏற்படும். விவசாயப் பணிகளில் லாபம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மகம் : அனுகூலமான நாள்.

பூரம் : நம்பிக்கை மேம்படும்.

உத்திரம் :  லாபகரமான நாள்.

 

 

 


கன்னி (Kanni)- Virgo 

குடும்பத்துடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். வித்தியாசமான பொருட்ச்சேர்க்கை ஏற்படும். எதிர்பாராத உதவிகள் நண்பர்களால் கிடைக்கும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். புதிய நபர்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். ரகசியமான செயல்பாடுகள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். கவலை விலகும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : போட்டிகள் குறையும்.

அஸ்தம் : கனிவு வேண்டும்.

சித்திரை : ஆதாயகரமான நாள்.

 

 

 


துலாம் (Thulaam)- Libra 

மற்றவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். தந்திரமான சில விஷயங்கள் மூலம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். பாகப்பிரிவினை தொடர்பான செயல்களில் விவேகம் வேண்டும். புதிய தொழில்நுட்பக் கருவிகளில் கவனம் வேண்டும். கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்

சித்திரை : எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

சுவாதி : விவேகம் வேண்டும்.

விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும்.

 


விருச்சிகம் (Viruchigam) -Scorpio

தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். சிந்தனைப் போக்கில் மாற்றமான சூழல் அமையும். பூர்வீகச் சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். போட்டி தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோக பணிகளில் விவேகம் வேண்டும். வியாபார பணிகளில் சில சிக்கலான சூழல் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

விசாகம் : ஏற்ற, இறக்கமான நாள்.

அனுஷம் : அலைச்சல் ஏற்படும்.

கேட்டை : சிக்கலான நாள்.

 

 

 


தனுசு (Dhanusu)- Sagittarius

சபை பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பயணங்கள் மூலம் புதிய அனுபவங்களும், மாற்றங்களும் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும்.  மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். கோபம் மறையும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

மூலம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

பூராடம் : மாற்றங்கள் உண்டாகும்.

உத்திராடம் : கவலைகள் நீங்கும்.

 

 

 


மகரம் (Magaram)- Capricorn

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசுப் பணிகளில் அனுகூலம் உண்டாகும். சகோதர வகையில் அனுசரித்துச் செல்லவும். அனுபவப் பேச்சுக்களால் நட்பு வட்டம் விரிவடையும். உடன் பிறந்தவர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புகழ் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

திருவோணம் : அனுசரித்துச் செல்லவும்.

அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.

 

 


கும்பம் (Kumbam)- Aquarius

எதிர்பாராத பயணங்களால் புதிய அறிமுகம் கிடைக்கும். பெற்றோர்களின் ஆதரவுகள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வெற்றி கிடைக்கும். கால்நடைகள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். ஆரோக்கியம் குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். திடீர் வாய்ப்புகள் மூலம் மாற்றம் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.

சதயம் : புரிதல்கள் அதிகரிக்கும்.

பூரட்டாதி : மாற்றம் உண்டாகும்.

 

 



மீனம் (Meenam) - Pisces

உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பொன், பொருட்களில் கவனம் வேண்டும். அரசியல்வாதிகள் பொறுமையுடன் செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். பயனற்ற செலவுகளால் சேமிப்புகள் குறையும். பிரயாணம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 

பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.

உத்திரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.

ரேவதி : சேமிப்புகள் குறையும்.

 

No comments

Thank you for your comments