Breaking News

பருத்தி தினம் விழா 2024!

கோவை மாவட்டம் சின்னயம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் காட்டன் கவுன்சில் இன்டர்நேஷனல் சார்பில் பருத்தி தினம் 2024, மற்றும் புதிய தர அளவீட்டு கருவியையும் காட்டன் யுஎஸ் அறிமுகம் நிகழ்ச்சி நடைபெற்றது.



சர்வதேச பருத்தி கவுன்சில் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நிலைத்தன்மை, தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் கவனம் செலுத்துதல், உலகளாவிய பருத்தி உற்பத்தியில் அமெரிக்க பருத்தி மற்றும் இந்திய ஜவுளித் துறையின் பங்கு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது
காட்டன் யுஎஸ்ஏ-ன் தெற்காசியாவிற்கான விநியோகப் பிரிவு இயக்குனர் வில்லியம் பெட்டன்டோர்ப், யு.எஸ். காட்டன் அறக்கட்டளை நெறிமுறை திட்டத்தின் வெற்றி குறித்து பேசினார். இவை விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்திய ஜவுளி ஆலைகளுக்கும், இது சார்ந்த நிறுவனங்களுக்கும் புதிய வாய்ப்புகளையும் வழங்கும் என்று பேசினார்.சுபிமா தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மார்க் லெவ்கோவிட்ஸ் பேசுகையில், ஜவுளித் தொழிலில் சுபிமா சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது இந்த கூட்டாண்மை ஒரு நிலையான மற்றும் சிறப்பான ஜவுளி தொழிலுக்கான எதிர்காலத்தை பிரதிபலிக்கிறது என்று பேசினார்.இந்தியாவில் அதிகரித்து வரும் யு.எஸ்.பிமா பருத்தி தேவைகள் குறித்தும் நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசிய சர்வதேச பருத்தி கவுன்சில் பிரதிநிதி பீஷ் நரங் கூறுகையில், இந்தியாவின் ஜவுளித் தொழில் புதுமை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் முன்னணியில் உள்ளது, இது உலகளாவிய பருத்தி வர்த்தகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளது. மேலும் அவர் யு.எஸ். அப்லேண்ட் பருத்தி மீதான இறக்குமதி வரியை நீக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார், இதன் காரணமாக இந்திய நூற்பு ஆலைகள், அமெரிக்காவிலிருந்து உயர்தர நார்ச்சத்து நிறைந்த பருத்தியை பெறுவதோடு, இது இந்தியாவின் ஜவுளித் தொழிலின் போட்டித்தன்மை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தும் என்று தெரிவித்தார்.



இந்த நிகழ்ச்சி முழுவதும் தொழில்நுட்பம் மற்றும் நவீன கண்டுபிடிப்புகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.  
முக்கிய காரணிகள் குறித்து ஹில்& நோல்டன் சங்க இயக்குனர் இவா மரியா மில்லே மற்றும் தொழில் வல்லுனர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments