அல்ட்ரா வயலட் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் நிறுவன மையம் திறப்பு!
கோவை நவ இந்தியா பகுதியில் அல்ட்ரா வயலட் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் புதிய அனுபவ மையம் திறப்பு விழா அல்ட்ரா வயலட் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான நாராயண் சுப்பிரமணியம் தலைமை வகித்து அனுபவ மையத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
இது குறித்து அல்ட்ரா வயலட் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மற்றும் இணை நிறுவனர் நீரஜ் ராஜ்மோகன் கூறுகையில் அதிவேக எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழும் அல்ட்ரா வயலட் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் புதிய அனுபவ மையம் கோவையில் திறந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது மேலும் வாடிக்கையாளர்களுக்கு சேவை விற்பனை மற்றும் உதிரி பாகங்கள் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் வகையில் இந்த அனுபவம் மையமானது திறக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
No comments
Thank you for your comments