Breaking News

பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் காலி பணி இடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக் கடைசி தேதி 16.12.2024

வேலூர், டிச.4-

பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை, வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Societ)  மூலமாக மருத்துவ அலுவலர்  (Medical Officer UH & WC), ஒப்பந்த செவிலியர்  (Staff Nurse UH & WC),  பல்நோக்கு சுகாதார பணியாளர்  (MPHW (HI GR II) UH & WC), ஆதரவு ஊழியர் (Support Staff UH & WC),  ஆயுஷ் மருத்துவ அலுவலர் (Ayush Medical Officer),  மருந்து வழங்குநர் (Dispenser) மற்றும்


 பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் (Multipurpose Worker) மற்றும்  புதியதாக தோற்றுவிக்கப்பட்ட காலியிடம் சித்த ஆலோசகர் (Siddha Consultant) சிகிச்சை உதவியாளர் (Therapetic Assistant), அரசு வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை பல் தொழில்நுட்ப வல்லுநர் (Dental Technician), இயன் முறை மருத்துவர் (Physiotherapist),  

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் (Security Guard), Cook Cum Care Taker, பணிநியமனம் செய்ய தேசிய நலகுழும் இயக்குநர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேற்கண்ட காலிப் பணி இடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிநியமனம் செய்ய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 16.12.2024 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்றக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை செயற்செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலம் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி: 

மாவட்ட சுகாதார அலுவலர்,

வேலூர் மாவட்ட சுகாதார அலுவலகம்,

2வது மாடி, பி பிளாக், 

வேலூர் மாவட்ட ஆட்சியரகம்,

சத்துவாச்சாரி,

வேலூர் - 632009


அதிகாரப்பூர்வ இணையதளம்  

click here  to downloand 👉 விண்ணப்பம் 




No comments

Thank you for your comments