Breaking News

17 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

 

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் ரூ. 75.95 கோடி மதிப்பிலான 17 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 14.28 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 36 திட்ட பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, 247 ஊராட்சிகளுக்கு 345 கலைஞர் விளையாட்டு உபகரணங்களின் தொகுப்புகளை வழங்கி, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 4,844 பயனாளிகளுக்கு ரூ. 128.92 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (7.12.2024) வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பொன் விழாவினை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் விழாவில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் ரூ.75.95 கோடி மதிப்பில் 17 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.14.28 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 36 கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, 

வேலூர் மாவட்டத்தில் உள்ள 247 ஊராட்சிகளுக்கு 33 வகையான விளையாட்டு பொருட்கள் அடங்கிய 345 விளையாட்டு உபகரண தொகுப்புகளையும், பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 4,844 பயனாளிகளுக்கு ரூ. 128.92 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் இன்று நடைபெற்ற விழாவில் பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.72.61 கோடி மதிப்பில் 9 பள்ளிகளில் வகுப்பறை கட்டடங்கள், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வேலூர் நகரத்திற்கு வருகை தரும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 250 படுக்கை வசதியுடன் கூடிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு கட்டடம், கருவூல கட்டடம், சார்பதிவாளர் அலுவலகம் என 12 திட்டப் பணிகளுக்கும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ. 3.34 கோடி மதிப்பில் 1 எல்.பி.ஜி மயான பூமி, 2 பள்ளிகளில் வகுப்பறை கட்டடங்கள், 1 பல்நோக்கு கட்டடம், 1 பேருந்து பயணியர் நிழற்குடை உள்ளிட்ட 5 திட்டப் பணிகள் என மொத்தம் ரூபாய் 75.95 கோடி மதிப்பில் 17 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், பொதுப்பணி துறையின் சார்பில் ரூ.5.48 கோடி மதிப்பில்  கட்டப்பட்டுள்ள 8 கட்டடங்களையும்,  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறையின் சார்பில் ரூ.89 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 7 அங்கன்வாடி மையங்களையும், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ரூ.5.05 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், நியாய விலை கடை உள்ளிட்ட 16 முடிவுற்ற திட்டப் பணிகளையும்,    பொது சுகாதாரத் துறையின் சார்பில் ரூ.1.46 கோடி மதிப்பில் 4 சுகாதார நிலையங்களையும், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் ரூ.1.40 கோடி மதிப்பில் டிராக்டர் பணிமனையையும் என மொத்தம் ரூ.14.28 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 36 கட்டடங்களை இன்று திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில்  2,761 பயனாளிகளுக்கு ரூ.70 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும்,  ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் 208 பயனாளிகளுக்கு ரூ.5.63 கோடி மதிப்பில் கலைஞர் கனவு இல்லம் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டங்களின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், மகளிர் திட்டத் துறையின் சார்பில் 440 பயனாளிகளுக்கு ரூ.38.26 கோடி மதிப்பில் கடன் உதவிகளையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 602 பயனாளிகளுக்கு ரூ.7.40 கோடி மதிப்பில் கடன் உதவிகளையும்,  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 169 பயனாளிகளுக்கு ரூ. 76.83 இலட்சம் மதிப்பில் மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் உள்ளிட்ட உபகரணங்களையும், சமூக நலத்துறையின் சார்பில் 250 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.25 கோடி வைப்பு தொகை உள்ளிட்ட நலதிட்டங்களையும், சுகாதார துறையின் சார்பில் 100 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.21.60 இலட்சம் மானியத்தில் டிராக்டர், பவர் ட்ரில்லர் உள்ளிட்ட வேளாண் உபகரணங்களையும், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.12.50 இலட்சம் மதிப்பில் கறவை மாடுகளையும், வேளாண்மை துறையின் சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ. 6.66 இலட்சம் மதிப்பில் சுழலும் கருவி, மண்புழு உரபடுக்கை உள்ளிட்ட வேளாண் கருவிகளையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.1.23 இலட்சம் மதிப்பில் சொட்டுநீர் பாசன கருவிகளையும், சிறுபான்மை நலத்துறையின் சார்பில் 107 பயனாளிகளுக்கு ரூ. 0.79 இலட்சம் மதிப்பில் தையல் இயந்திரம் மற்றும் நலவாரிய அட்டைகளையும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.12.63 இலட்சம் மதிப்பில் விவசாய மின் இணைப்பு ஆணைகளையும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 24 பயனாளிகளுக்கு ரூ.5.53 இலட்சம் மதிப்பில் தொழிலாளர்களுக்கு நிதியுதவியும்,  கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் 100 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளையும்  என மொத்தம் 4,844 பயனாளிகளுக்கு ரூ. 128.92 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன், அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முனைவர் எஸ்.ஜெகத்ரட்சகன், திரு.டி.எம். கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஏ.பி. நந்தகுமார் (அணைக்கட்டு), திரு.ப.கார்த்திகேயன் (வேலூர்), திருமதி அமுலுவிஜயன் (குடியாத்தம்), திரு. ஜே.எல்.ஈஸ்வரப்பன் (ஆற்காடு), திரு. அ.செ.வில்வநாதன் (ஆம்பூர்), இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் திரு.அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப.,, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு.ஜெ.மேகநாத ரெட்டி, வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.இரா.சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., வேலூர் மாநகராட்சி மேயர் திருமதி சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் திரு.மு.பாபு, துணை மேயர் திரு. மா.சுனில் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி த. மாலதி மற்றும் அரசு அலுவலர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 




No comments

Thank you for your comments