காஞ்சிபுரத்தில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பொது மருத்துவ முகாம்
காஞ்சிபுரம்,டிச.7:
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இலவச பொது மருத்துவ முகாம் மாநகராட்சி துப்புரவுப்பணியாளர்களுக்கு நடைபெற்றது.முகாமை காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் வே.நவேந்திரன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் செந்தில் முன்னிலை வகித்தார்.மாநகர சுகாதார அலுவலர் அருள்நம்பி அனைவரையும் வரவேற்று பேசினார்.
முகாமில் மீனாட்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,அகர்வால் கண் மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவனையின் அலோபதி மற்றும் சித்த மருத்துவம், மாநகராட்சி மருத்துவர்கள் ஆகியோர் இணைந்து மருத்துவ ஆலோசனைகளும் மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கினார்கள்.
முகாமில் ரத்தம்,உயர் ரத்த அழுத்த பரிசோதனைகள்,நடமாடும் காசநோய் கண்டறியும் வாகனம் மூலம் பரிசோதனைகளும் நடைபெற்றன.
முகாமில் 500க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள்,துப்புரவு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments