Breaking News

பெள்ளாதி ஊராட்சியில் 1 கோடியே 70 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைத்தார் எம்.எல்.ஏ, ஏ.கே.செல்வராஜ்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஒன்றியம் பெள்ளாதி ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளாக சின்னதொட்டிபாளையம் எம்.ஜி.ஆர் காலனியில் புதிய சமுதாயக் கூடம் 37 இலட்சம் மதிப்பீட்டிலும், தேரம்பாளையம் பகுதியில் புதிய நியாய விலை கடை 12 இலட்சம் மதிப்பீட்டிலும் கட்டிய புதிய கட்டடங்களுக்கு திறப்பு விழாவும் மேலும் விஐபி நகரில் 1 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை, வடிகால் அமைத்தல், தார் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜையும் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் கலந்துகொண்டு வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜையும் புதிய கட்டடங்களை திறப்பு விழா செய்தும் துவக்கி வைத்தார். 



நிகழ்விற்கு ஊராட்சி மன்ற தலைவர் பூபதி (எ) குமரேசன் தலைமை தாங்கினார். உடன்  ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை மகேந்திரன், ஒன்றிய கழக செயலாளர் ஜீவானந்தம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அமுதா ராமசாமி, மாவட்ட கவுன்சிலர் பி.டி.கந்தசாமி, ஒன்றிய கவுன்சிலர் ரத்தினம், வார்டு உறுப்பினர் சுரேஷ், ஊராட்சி செயலாளர் சுரேஷ்குமார், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments

Thank you for your comments