பச்சையப்பன் கல்லூரி வைரவிழா - மாரத்தான் ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
காஞ்சிபுரம், டிச.29:
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியின் 75 வது ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற வைரவிழாவையொட்டி 5 கி.மீ.தூர மாநல அளவிலான மாரத்தான் ஓட்டப் பந்தய போட்டி போதைப் பொருட்கள் இல்லா தமிழகம் என்ற வாசகத்தை முன்னிறுத்தி நடைபெற்றது.
காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கிய போட்டியை காஞ்சிபுரம் எஸ்.பி.கே.சண்முகம் தொடக்கி வைத்தார். மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் பங்கேற்ற இப்போட்டி பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் வந்து நிறைவு பெற்றது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் முருககூத்தன் தலைமை வகித்தார். மது விலக்குப் பிரிவு டிஎஸ்பி சரண்யாதேவி,பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கே.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் செந்தில்தங்கராஜ் வரவேற்று பேசினார். விழாவில் காஞ்சிபுரம் எம்பி க.செல்வம்,எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக் கோப்பையை பரிசாக வழங்கினர்.
பரிசு பெற்றவர்களில் பெண்கள் பிரிவில் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மாணவியர் சந்தியா முதல் பரிசும், பிரியா 2 வது பரிசும் பெற்றனர்.3 வது பரிசை திருவள்ளூர் மாவட்டம் கிரிஸ்ட் கல்லூரி மாணவி பெற்றார்.
ஆடவர் பிரிவில் ஏலகிரி டான்போஸ்கோ கல்லூரி மாணவர் அருண் முதல் பரிசும்,சென்னை செயிண்ட் ஜோசப் கல்லூரி மாணவர் ஹரிதாஸ் 2 வது பரிசும்,3 வது பரிசை காஞ்சிபுரம் கிருஷ்ணா கல்லூரி மாணவர் சுரேஷ் ஆகியோரும் பெற்றனர்.
முதல் பரிசுத்தொகையாக ரூ.5075ம், 2 வது பரிசுத்தொகையாக ரூ.3075 ம் ,3 வது பரிசுத்தொகையாக ரூ.2075ம் வழங்கப்பட்டது. விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவ,மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments