குழந்தைகளின் பாதுக்காப்புக்கான நடைப்பயணப் (“Walk for Childrem”) பேரணி - மாணவியர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், இன்று (14.11.2024) தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கி.சண்முகம் ஆகியோர் முன்னிலையில் நடைப்பயணப் (“Walk for Childrem”) பேரணியை மாணவியர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம், நவம்பர் 19 சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான சீண்டல்கள் தடுப்பு தினம் மற்றும் நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பேரணிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைப்பயணப் (“Walk for Childrem”) பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தொடங்கி வைத்து, பேரணியில் கலந்துக் கொண்டார். இப்பேரணியில் 150-க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணியில் குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல் தொடர்பான வாசகங்களுடன் பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தொடங்கி பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி வரை சென்று நிறைவடைந்தது.
தேசிய குழந்தைகள் தினவிழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும், குழந்தைகள் தினவிழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை” நமது எதிர்காலத்திற்காக முதலீடு செய்வதென்பது நம் குழந்தைகளுகாக முதலீடு செய்வது ஆகும்” (”Investing in our future means investing in our children” or “Listen to the Future”) எனும் தலைப்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சார்லஸ் சாம்ராஜதுரை, காஞ்சிபுரம் சார் ஆட்சியர் திரு. ஆஷிக் அலி, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி. சத்யா, திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜ.சரவணக்கண்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி. ர.சக்தி காவியா, அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவியர்கள் கலந்துக் கொண்டனர்.
No comments
Thank you for your comments