குமரகோட்டம் முருகன் கோயில் புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்பு
காஞ்சிபுரம், நவ.14:
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோயில் புதிய செயல் அலுவலராக திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை சேர்ந்த கேசவன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் 7 ஏ போட்டித் தேர்வில் வெற்றி பெற்று முதல் முதலாக புதிய செயல் அலுவலராக பொறுப்பேற்றார்.
கோயில் பூஜகர்கள், பணியாளர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். முன்னதாக கோயில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த கதிரவன் புதிய செயல் அலுவலர் கேசவனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
No comments
Thank you for your comments