Breaking News

காஞ்சிபுரத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கு பணிப்பாதுகாப்பு கூட்டம்

காஞ்சிபுரம், நவ.19:

காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம் வடக்கு கோட்டம் சார்பில் மின்வாரிய ஊழியர்களுக்கான பணிப்பாதுகாப்பு பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


மின்வாரிய ஊழியர்களுக்கு மின்பகிர்மான வட்டம் காஞ்சிபுரம் கோட்டம் சார்பில் பணிப்பாதுகாப்பு பயிற்சி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு கோட்ட பொறியாளர் பாண்டியராஜன், செயற்பொறியாளர் பிரசாத், உதவி செயற்பொறியாளர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இப்பயிற்சி வகுப்பில் மின்சாரம் தொடர்பான பாதுகாப்பு உபகரணங்களை எப்படிப் பயன்படுத்துவது,பாதுகாப்புடன் எவ்வாறு பணிபுரிவது என்பன குறித்து ஊழியர்களுக்கு விரிவாக விளக்கி கூறப்பட்டது.

மின்மாற்றி பராமரிப்பு,மின் தொடர்கள் பராமரிப்பு முதலிய அன்றாடப் பணிகளை கையேட்டில் தவறாமல் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும், பணியின் போது விழிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் வட்ட மேற்பார்வை பொறியாளர் ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.

மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் சோழராஜன், வெங்கடேசன் உட்பட இளநிலை பொறியாளர்கள்,தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட 200க்கும் மேற்பட்ட மின்வாரிய பணியாளர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments