Breaking News

நாளைய (20-11-2024) ராசி பலன்கள்


மேஷம்

வியாபார ரீதியான பயணங்கள் ஏற்படும். ஆசிரியர்களின் ஆலோசனை மாற்றத்தை உருவாக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். ஆரோக்கியம் குறித்த சிந்தனைகள் மேம்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டாகும்.  தன வரவுகளில் திருப்தி உண்டாகும். ஆர்வம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அஸ்வினி : ஆலோசனைகள் கிடைக்கும்.

பரணி : சிந்தனைகள் மேம்படும்.

கிருத்திகை :  திருப்திகரமான நாள்.

 

ரிஷபம்

மனதில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் மேம்படும். விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் மேம்படும். பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பத்திரம் சார்ந்த விஷயங்களில் மேன்மை ஏற்படும். நட்பு மேம்படும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

கிருத்திகை : ஒத்துழைப்புகள் மேம்படும்.

ரோகிணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மிருகசீரிஷம் : மேன்மை ஏற்படும்.

 

மிதுனம்

எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். முயற்சிக்கு உண்டான பலன்கள் தாமதமாக கிடைக்கும். வியாபார ரீதியான கொள்முதலில் சிந்தித்துச் செயல்படவும். கனிவான பேச்சுக்களால் நன்மதிப்பு உருவாகும். அலுவலகப் பணிகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். காலம் தவறி உணவு உண்பதைத் தவிர்க்கவும். கீர்த்தி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

மிருகசீரிஷம் : நெருக்கடிகள் உண்டாகும்.

திருவாதிரை : சிந்தித்துச் செயல்படவும்.

புனர்பூசம் : ஏற்ற இறக்கமான நாள்.

 

 

கடகம்

திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். சமூகப் பணிகளில் சில புரிதல் உண்டாகும்.  குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். தர்மப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். விதண்டாவாத பேச்சுக்களைத் தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் விவேகத்துடன் செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களைத் தவிர்க்கவும். மறதி மறையும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : சேமிப்புகள் குறையும்.

பூசம் : அனுசரித்துச் செல்லவும்.

ஆயில்யம் : விவேகத்துடன் செயல்படவும்.

 

 சிம்மம்

குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதரர்கள் வழியில் சிறு சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக வீட்டினை சீரமைத்து விரிவுபடுத்துவீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த சில வழக்குகளில் தெளிவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடங்கல் குறையும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : சங்கடங்கள் நீங்கும்.

பூரம் : தெளிவுகள் ஏற்படும்.

உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

 

 

 

கன்னி

நினைத்த பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய பொறுப்புகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். ஆராய்ச்சிப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். புதுவிதமான தேடல்கள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். திடம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

உத்திரம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

அஸ்தம் : முன்னேற்றம் உண்டாகும்.

சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.

 

 

 

துலாம்

எதிலும் பொறுமையுடன் செயல்படவும். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரம் நிமித்தமான பயணம் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பேச்சுக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்

சித்திரை : செலவுகள் உண்டாகும்.

சுவாதி : அனுசரித்துச் செல்லவும்.

விசாகம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

 

 விருச்சிகம்

வெளிப்படையான சில பேச்சுக்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். செயல்களில் இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். வர்த்தகப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். மனை மீதான கடன் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். ஜெயம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

விசாகம் : அனுகூலமான நாள்.

அனுஷம் : எதிர்ப்புகள் விலகும்.

கேட்டை :  உதவிகள் கிடைக்கும்.

 

 

தனுசு

பயனற்ற சிந்தனைகளைத் தவிர்க்கவும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். விவசாயத் துறைகளில் பொறுமை வேண்டும். வெளியூர் பயணங்களில் மாற்றம் ஏற்படும். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். அமைதி வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மூலம் : செலவுகள் உண்டாகும்.

பூராடம் : மாற்றம் ஏற்படும்.

உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்.

 

 

மகரம்

மனம் விரும்பிய படி செயல்படுவீர்கள். சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். கலகலப்பான சூழலால் மகிழ்ச்சி உண்டாகும். எதிலும் சிக்கனமாகச் செயல்படுவது சார்ந்த முடிவுகள் உண்டாகும். சுற்றுலா செல்வது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கல்வியில் மேன்மை ஏற்படும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள் குறையும். பெருமை நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : தெளிவு ஏற்படும்.

திருவோணம் : முடிவுகள் உண்டாகும்.

அவிட்டம் : சிக்கல்கள் குறையும்.

 

 

கும்பம்

சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும்.  சிக்கல் விலகும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அவிட்டம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

சதயம் : முன்னேற்றமான நாள்.

பூரட்டாதி : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

 

 

 மீனம்

மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தொழில் ரீதியான தொடர்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் சாதகமான சூழல் அமையும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கலை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உதவி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.

உத்திரட்டாதி :  சாதகமான நாள்.

ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

 

No comments

Thank you for your comments