Breaking News

அமைச்சர் சா.மு. நாசரிடம் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு முக்கிய கோரிக்கைகள் முன்வைத்தது

திருவள்ளூர் :

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பின் மாநில தலைவர் டாக்டர் செ.பால்பர்ணபாஸ்  அறிவுறுத்தலின்படி, திருவள்ளூர் மாவட்ட சார்பாக மாநிலத்துணைத் தலைவர் மற்றும் மாவட்டத் தலைவர் கே.ரவிச்சந்திரன்  தலைமையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ச.மு.நாசர் அவர்களை சந்தித்து பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.


அவை: 

பேருந்து சேவை வழிமாற்றம்:

ஆவடி-பட்டாபிராம்-தண்டுரை வழியாக செல்வதாக இருந்த பேருந்துகள் மாற்று வழிகளில் இயக்கப்படுவதால் தண்டுரை, அனைக்கட்டுச்சேரி, சித்துக்காடு போன்ற பகுதிகளில் பொதுமக்கள் பேருந்து வசதியின்றி சிரமப்படுகின்றனர். இதனை தட்டச்சு செய்து, உடனடியாக தண்டுரை வழியாக பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

அண்ணா சமூக கூடம்:

தண்டுரையில் உள்ள அண்ணா சமூகக்கூடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

மேற்கூரை இல்லாத பேருந்து நிலையங்கள்:

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல பேருந்து நிலையங்களுக்கு மேற்கூரை இல்லை. இதனை சரி செய்ய வேண்டும் எனக் கேட்கப்பட்டது.

அமைச்சர் ச.மு.நாசர்  அனைத்துக் கோரிக்கைகளையும் கவனமாக ஏற்று, அவற்றை விரைவில் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். மேலும், ஆவடி மாநகர ஆணையர், தண்டுரையில் மாற்று இடத்தில் சமூகக்கூடத்தை அமைத்து தருவதாக உறுதியளித்தார்.


No comments

Thank you for your comments