பெருநகர் இருளர் குடியிருப்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு - தரையில் அமைர்ந்து உரையாடிய டிஎஸ்பி சங்கர் கணேஷ்
காஞ்சிபுரம்,நவ.13:
காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் அருகே பெரியகளத்து மேட்டுத் தெருவில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் குழந்தைகள் கல்வி கற்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்து விளக்கமளித்தார். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் இடைநிற்றல் இல்லாமல் கல்வி கற்க பெற்றோர்கள் முன்வர வேண்டும்.
காவல்துறை சார்பில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டது.நிறைவாக பெருநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கேசவலு நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments