Breaking News

காஞ்சிபுரத்தில் விரதமாலை அணிந்து கொண்ட ஐயப்ப பக்தர்கள்

காஞ்சிபுரம்,  நவ.16:

கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி சபரிமலை யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சனிக்கிழமை விரதமாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள்.


கேரளமாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்ய யாத்திரையாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் விரதமாலை அணிந்து தொடர்ந்து 48 நாட்கள் விரதத்தை தொடங்குவது வழக்கம். 

இதன்படி மாதத்தின் முதல் நாளையொட்டி காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில், நகரீஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள ஐயப்பன் சந்நிதி,திருக்கச்சி நம்பிகள் கோயில் தெருவில் உள்ள விநாயகர் கோயில் ஆகியனவற்றில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தரிசனத்தின் போது விரதமாலையை அர்ச்சகர்களிடம் கொடுத்து சிறப்பு பூஜைகள் செய்து வாங்கி பின்னர் அதனை தங்களது குருவடியார்களிடம் கொடுத்து விரதமாலை அணிந்து கொண்டனர்.

ஐயப்பபக்தர்களில் சிலர் தங்களது குழந்தைகளுக்கும் மாலை அணிவித்து விரத மாலையை அணிந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments