கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணனுக்கு குவியும் பாராட்டுக்கள்!
கோவை :
கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் புதிய கண்காணிப்பு கேமரா அறை திறப்பு விழா நடைபெற்றது.
கோவை ஆர்எஸ்புரம் பகுதியில் ராஜஸ்தானி சங்கம் பங்களிப்புடன் புதியதாக அதிநவீன 64 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமராவில் பகலில் உருவங்கள் துல்லியமாக தெரிவதைப்போல் இரவு நேரங்களிலும் துல்லியமாக தெரியும் மேலும் பேசுவது முதற்கொண்டு துல்லியமாக பதிவாகும் வகையில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு அறை திறப்பு விழா நடைபெற்றது.
இதனை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். கோவை மாநகர காவல் ஆணையாளராக பாலகிருஷ்ணன் அவர்கள் பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.
குறிப்பாக ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்பதற்காக கோவை மாநகர் முழுவதும் 100 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா என்கிற அளவில் பல்வேறு பகுதிகளில் கேமரா பொருத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
கல்லூரி மாணவிகள் பயன்பெறும் வகையில் போலீஸ் அக்கா திட்டம் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் யுடேர்ன் போன்ற திட்டங்கள் மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் செயல்படுத்தும் வகையில் முன்மாதிரியான திட்டங்களாக திகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மாநகர் காவல் ஆணையருக்கு பொது மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிகின்றன.
இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் சரவணகுமார் ,உதவி ஆணையாளர் நந்தினி,காவல்நிலைய ஆய்வாளர் காசி பாண்டியன்,ராஜஸ்தானி சங்கத் தலைவர் கோதம் சந்த் ஸ்ரீஸ்ரீமால், செயலாளர் விகாஸ் ஜெயின், பொருளாளர் விக்ரம் சலேச்சா மற்றும் பிற கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் திட்டக்குழு உறுப்பினர் கார்த்திக் செல்வராஜ், காந்தி பார்க் பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் து.பரமசிவன், மற்றும் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments