Breaking News

கோதவாடி ஊராட்சியில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் துவைக்கி வைத்தார் எம்.பி. ஈஸ்வரசாமி!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியம் கோதவாடி ஊராட்சியில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை,சிறு பாலம், வடிகால், பைப்லைன் ஆகிய பணிகள் நடைபெறவுள்ளது.



இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடை பெற்றது ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி தலைமையில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி 
கார்த்திகேயன்,ஒன்றியசெயலாளர் கிரிகதிர்வேல் ஆகியோர் முன்னிலையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி,கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் அடிக்கல் நாட்டி வைத்து பணிகளை துவக்கி வைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் நடராஜன் விவசாய அணி மாவட்ட தலைவர் மயில்சாமி,கிணத்துக்கடவு பேரூராட்சி மன்றத்தலைவர் கதிர்வேல்,விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் குமார்,மதுக்கரை ஒன்றிய செயலாளர் விஜயசேகரன்,சொக்கனுர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு (எ) திருநாவுக்கரசு குதிரையாலம்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் தர்மராஜ்,கப்பளாங்கரை ஊராட்சி மன்றத்தலைவர் தேவி செந்தில் குமார்,ஆண்டிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ருக்குமணி சிதம்பரம்,வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார்
கோதவாடி திமுக நிர்வாகிகள், இளங்கோவன்,ஜெயக்குமார். சிவக்குமார் இந்திராணி ராஜ்குமார் பொன்னுசாமி சிவசாமி,பேக்கரி செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments