Breaking News

மாகறல் கிராமத்தில் இலவச இயன்முறை மருத்துவ முகாம்

காஞ்சிபுரம், நவ.24: 

காஞ்சிபுரம் அருகே மாகறல் கிராமத்தில் சென்னை மீனாட்சி இயன்முறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச இயன்முறை மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


காஞ்சிபுரம் அருகே மாகறல் பேருந்து நிலையம் அருகில் உள்ள சேவை மையத்தில் சென்னை மீனாட்சி இயன்முறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இலவச இயன்முறை மருத்துவ முகாமிற்கு அக்கல்லூரி முதல்வர் ஆர்.பார்த்தசாரதி தலைமை வகித்தார்.

கல்லூரியின் இணைப்பேராசிரியர் ஹரிஹர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாகறல் ஊராட்சி மன்ற தலைவர் மேதாஞானம் வரவேற்று பேசினார். 

முகாமில் கழுத்துவலி,மூட்டு வலி,தோள்பட்டைவலி, பின் இடுப்பு வலி ஆகியனவற்றுக்கு எளிய பயிற்சிகள் மூலம் குணப்படுத்தும் முறைகளை இயன்முறை மருத்துவக் கல்லூரியில் பயிலும் பயிற்சி மருத்துவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாகராஜன் நன்றி கூறினார்.

முகாம்தொடக்க விழாவில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கலாநிதி மற்றும் ரமேஷ், சிவானந்தம் உட்பட மாகறல் கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். முகாமில் 83 நபர்களுக்கு இலவசமாக இயன்முறை மருத்துவ ஆலோசனைகளும்,பயிற்சிகளும் வழங்கப்பட்டது.

No comments

Thank you for your comments