Breaking News

கோவை மாவட்டம் அக்ரஹார சாமகுளம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் !

கோவை :

கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், அக்ரகார சாமக்குளம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் வேணு கோபால சாமி திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்றது. 



இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற துணை தலைவர் சத்தியபாமா தலைமை தாங்கினார் பற்றாளர் பரிமளா முன்னிலை வகித்தார்.ஊராட்சி செயலர் வீரமணி ஆண்டறிக்கை மற்றும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் பற்றி வாசித்தார்.

இக்கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் கௌரவிப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச் சரிக்கை நடவடிக்கை, தூய்மை பாரத இயக்கத் திட்டம், மகாத்மா காந்தி ஊரக தேசிய வேலை உறுதிச் சட்டம், ஜல் ஜீவன் திட்டம், கிராமப்புற மேம் பாட்டு திட்டம்,கூட்டாண்மை வாழ்வாதாரம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

மேலும் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

No comments

Thank you for your comments