வள்ளி தெய்வானை உடனுறை ஆறுமுக வேலவர் சன்னிதானத்தில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது
கோவை மாவட்டம் தடாகம் சாலை இடையர்பாளையம் காந்திநகர் பகுதியில் உள்ள அருள்மிகு பராசக்தி மாரியம்மன் திருக்கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறை ஆறுமுக வேலவர் சன்னிதானத்தில் முதலாமாண்டு கந்தசஷ்டி, சூரசம் ஹாரம், இலட்சார்ச் சனை திருவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த சூரசம்ஹாரத்தில் ஆறுமுக வேலவருக்கு திருமஞ்சனம் வேள்வி அர்ச்சனை வழிபாடு சண்முக அர்ச்சனை அன்னை பராசக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்வு,வீரபாகு சூரசம்காரம் வேலவர் கஜமுகசுரனையும் தாரகா சூரணையும் சிங்கமுக சூரணையும் சம்ஹாரம் செய்து சூரபதுமனை சேவலும் மயிலுமாக ஏற்றருளும் காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான சிறப்பு ஏற்பாடுகளை கோவில் தலைவர் பெஸ்ட் எம். செல்வராஜ், செயலாளர் ஆர். அசோக்குமார், பொருளாளர் ரவிக்குமார், துணைத் தலைவர் ஆர் ராஜேந் திரன், துணை செயலாளர் வி.சி ஆறுமுகம், துணை பொருளாளர் டி. லட்சுமணன் ஆகியோர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது
சூரசம்காரம் நிகழ்வானது கோவில் சன்னிதானத்திலிருந்து தொடங்கி அப்பகுதி முழுவதும் ஊர்வலமாக முருகரை அழைத்து வந்து சன்னிதானம் வந்தடைந்தனர். இதில் ஆயிரத்திற் கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் இது குறித்து கோவில் நிர் வாகிகள் தெரிவிக்கையில் கந்த சஷ்டி விழாவானது திருக்கோவிலில் முதல் முறையாக நடைபெற்ற நிலையில் இது பொது மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது மேலும் இனிவரும் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற கந்த சஷ்டி விழா நடை பெறும் என்று கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


No comments
Thank you for your comments