62ஆம் ஆண்டு கந்த சஷ்டி பெருவிழா
கோவை காந்திபார்க் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக் கோவிலில் 62ஆம் ஆண்டு கந்த சஷ்டி பெருவிழா மற்றும் இலட்சார்ச்சனை விழா கடந்த வெள்ளிக்கிழமை முதல் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.
கந்தசஷ்டி விழா ஏழாம் நாளில் மாலையில் திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி அறங்காவலர்குழு தலைவர் து.பரமசிவன் தலைமையில் நடை பெற்றது.இந்நிகழ்ச்சியில் திட்ட குழு உறுப்பினர் கார்த்திக் செல்வராஜ் கவுன்சிலர் மற்றும் அம்சவேணி கார்த்திக் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டு பாலதண் டாயு தபாணி அருள்பெற்றனர்.இந்நிகழ் ச்சியில் அறங்காவலர்கள் ஆர்.எஸ். மகேஸ்வரன்,பல.விஜயலட்சுமி,நா.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதுகுறித்து அறங்காவலர் குழு தலைவர் து.பரமசிவன் கூறுகையில் திருக்கல் யாண உற்சவ நிகழ்ச்சிக்கு கட்டளை தாரர்களாக 230க்கும் மேற்பட்ட பக்தர்கள் கட்டணம் செலுத்தியுள்ளார்கள். இத்திருத்தலத்தில் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு பக்தர்கள் அதிகளவில் கட்டணம் செலுத்தியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.மேலும் கட்டளைதாரர்களுக்கு அன்பளிப்பாக சில்வர்பாத்திரங்கள் பழவகைகள் இனிப்புகள் மற்றும் பிரசாதங்கள் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படு கின்றன என்று கூறினார்.திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பாலதண்டாயுதபாணியை தரிசித்து அருள் பெற்றன்னர்.


No comments
Thank you for your comments