காஞ்சிபுரத்தில் கூட்டுறவு துறை சார்பில் 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா.
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரத்தில் கூட்டுறவு துறை சார்பில், 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடை பெற்று வருகிறது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் 71 வது கூட்டுறவு வார விழா காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பா ஜெயஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.
கூட்டுறவு வார விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கலந்து கொண்டு கூட்டுறவு வார விழாவை துவக்கி வைத்து, தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறையின் மூலம் நடைபெறும் நலத்திட்ட பணிகளை எடுத்துக் கூறி சிறப்பு உரையாற்றி
1059 பயனாளிகளுக்கு 10 கோடியே 23 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நடப்பு ஆண்டில் பயிர்க்கடன் - ரூ.39.00 கோடி, கால்நடை பராமரிப்பு கடன் - ரூ.12.85 கோடி, நகைக்கடன் - ரூ.608.34கோடி, மகளிர் சுய உதவிக்குழு கடன் - ரூ.55.08 கோடி, சிறுவணிக கடன் - ரூ.4.83 கோடி, உழைக்கும் மகளிர் கடன் – ரூ.1.39கோடி, பண்ணைசாரா கடன் - ரூ.4.99 கோடி, தானிய ஈட்டுக்கடன்- ரூ.2.41 கோடி, மாற்றுத்திறனாளிகள் கடன் - ரூ.1.37 கோடி, வீட்டு வசதி கடன் – ரூ1.15 கோடி, வீட்டு அடமானக்கடன் - ரூ.12.41 கோடியும், இது தவிர தாட்கோ, டாப்செட்கோ மற்றும் டாம்கோ கடன் ஆகிய பல்வேறு வகையான கடன்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது எனவும்,
தமிழ்நாடு முதலமைச்சர் செய்துவரும் ஆக்கப்பூர்வமான அனைத்து திட்டங்களும் விவசாய பெருங்குடி மக்களையும், பொதுமக்களையும், உடனடியாக சென்றடைய கூட்டுறவுச் சங்கங்கள் பெரிதும் துணை நிற்கின்றன.
எனவே, கூட்டுறவு சங்கங்கள் மூலமாக உறுப்பினர்கள் பெற்ற கடன்களை, வாங்கிய நோக்கத்திற்கு பயன்படுத்தி உரிய காலத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும் சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு கேடயங்களும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களையும் அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், எம்எல்ஏகள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத்தலைவர் நித்தியா சுகுமார், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் ஆ.க.சிவமலர், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தலைவர் முத்துச்செல்வன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், மாணவ /மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
No comments
Thank you for your comments