Breaking News

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் வேத விற்பன்னர்களால் கந்த சஷ்டி பாராயணம்

காஞ்சிபுரம், நவ.4:

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் 55 வேத விற்பன்னர்களால் கந்தசஷ்டி பாராயணம் நவ,.2 ஆம் தேதி தொடங்கி வரும் 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி கிருஷ்ண யஷூர் வேத மூல நித்ய பாராயண அறக்கட்டளை சார்பில் 45வது ஆண்டாக காஞ்சிபுரம் சங்கர மட வளாகத்தில் மகா பெரியவர் அதிஷ்டானத்தின் முன்பாக கந்த சஷ்டி பாராணயம் நடைபெற்றது.

ஆனந்த கணபாடிகள் தலைமையில் 55 வேத விற்பன்னர்கள் பாராயணம் செய்தனர்.

காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசியுடன் சஷ்டி பாராயணம் நடைபெற்றதாக ஸ்ரீ மடத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments