Breaking News

காஞ்சிபுரம் அரசு மகளிர் கல்லூரியில் தற்காப்புக் கலை பயிற்சி

காஞ்சிபுரம், அக்.4:

காஞ்சிபுரம் அரசு பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவியர்க்கு இஷின்டிரியூ கராத்தே பிரிவின் சார்பில் திங்கள்கிழமை தற்காப்புக்கலை பயிற்சியளிக்கப்பட்டது.


சின்னக்காஞ்சிபுரத்தில் உள்ள அரசு பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவியர்க்கு தற்காப்புக் கலை பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சி தொடக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் மு.கோமதி தலைமை வகித்தார். 

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் எஸ்.பூம்பொழில், எஸ்.சுபாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் ஜி.புவனேசுவரி வரவேற்று பேசினார். 

இஷின்டிரியூ கராத்தே பிரிவின் தலைமைப் பயிற்சியாளர் ஏ.நூர்முகம்மது தலைமையிலான குழுவினர் கல்லூரியில் பயிலும் மாணவியர்க்கு தற்காப்புக்கலை பயிற்சியளித்தனர்.

கல்லூரியில் பயிலும் பெண்கள் பொது இடங்கள் மற்றும் பேருந்துகளில் செல்லும் போது பாதுகாப்புடன் செல்லுதல்,பாலியல் சீண்டல்கள், ஏதேனும் தொல்லைகள் ஏற்பட்டால் சமாளிப்பது குறித்து பயிற்சியளித்தனர்.

பயிற்சியின் போது சீமைக்கருவேல ஓடுகளை உடைத்தல், செங்கற்களை உடைத்தல் உள்ளிட்ட பயிற்சிகளும் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

No comments

Thank you for your comments