Breaking News

வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நிவாரண நிதி உதவி வழங்கல் - மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு

 காஞ்சிபுரம்  :

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக  மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்,  திருப்பெரும்புதூர் வட்டம், வல்லம் கிராமத்தை சேர்ந்த செல்வி. மணிமேகலை என்பவர் பாம்பு கடித்து இறந்ததினால் அவரின் தந்தை திரு.பூபதி அவர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து  ரூ.1,00,000/-த்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று  குறைகளை கேட்டறிந்தார்கள்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (04.11.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 292 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

இன்று  நடைபெற்ற  வாராந்திர மக்கள்  குறைதீர்க்கும்  நாள்  கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 21-வது  கால்நடை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளும் கணக்கெடுப்பாளர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் அறிவுரை கையேடுகளை வழங்கி, திருப்பெரும்புதூர் வட்டம், வல்லம் கிராமத்தை சேர்ந்த செல்வி. மணிமேகலை என்பவர் பாம்பு கடித்து இறந்ததினால் அவரின் தந்தை திரு.பூபதி அவர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து  ரூ.1,00,000/-த்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. க.ஆர்த்தி, காஞ்சிபுரம்  சார்  ஆட்சியர்  திரு.ஆஷிக் அலி, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.சத்யா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.வி.பாக்கியலட்சுமி,  மாவட்ட வழங்கல் அலுவலர் திரு. சி.பாலாஜி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments