Breaking News

காஞ்சிபுரத்தில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், நவ.14:

சென்னையில் அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் பாலாஜியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதைக் கண்டித்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்திய மருத்துவக் கழகம் காஞ்சிபுரம் கிளையும், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கமும் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மருத்துவக் கழக தலைவர் எஸ்.மனோகரன் தலைமை வகித்தார்.

செயலாளர் தன்யக் குமார்,இணைச் செயலாளர் வெ.முத்துக்குரமன், மத்தியக் குழு உறுப்பினர் தி.அன்புச்செல்வன்,மாநிலக் குழு உறுப்பினர் பி.டி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜிக்கு சிறப்பான சிகிச்சையளிக்கப்பட வேண்டும், மருத்துவரை தாக்கிய நபருக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும், மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கவும், மத்திய அரசு மருத்துவர்களுக்கென பாதுகாப்புக்காக சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கழகத்தின் பெண் மருத்துவர்கள் பிரிவின் செயலாளர் ஜி.காஞ்சனா, மூத்த மருத்துவர் ஜீவானந்தம் மற்றும் மருத்துவர்கள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டனக் கோஷங்களை எழுப்பினார்கள்.

முன்னதாக காஞ்சிபுரம் ரயில்நிலைய சாலையில் உள்ள லைப்கேர் மருத்துவமனையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

No comments

Thank you for your comments