பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார் கலைச்செல்வி மோகன்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (25.11.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 441 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
இன்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மகளிர் திட்டம்/தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககம் சார்பில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பாலின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்து கொண்டனர்.
தொடர்ந்து மத நல்லிணக்கத்திற்கான தேசிய அறக்கட்டளைக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நிதி வழங்கி, தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. க.ஆர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.சத்யா, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.சி.பாலாஜி, தனிதுணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.பாக்கியலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் சமூக பங்களிப்பு நிதியிலிருந்து ஹேண்ட் இன் ஹேண்ட் மூலம் வழங்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ சேவை ஊர்தியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.கோபிநாத், ஏசியன் பெயிண்ட்ஸ் நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.


No comments
Thank you for your comments