காஞ்சிபுரம் கலைத் திருவிழாவில் சாதனைக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா - ஆட்சியர் வழங்கினார்
காஞ்சிபுரம், நவ.9:
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் சனிக்கிழமை கலைத்திருவிழா தொடங்கியது.
தொடக்க விழாவிற்கு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து சாதனைக் கலைஞர்கள் மொத்தம் 45 பேருக்கு பல்வேறு விருதுகளை வழங்கினார்.
விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், ஒன்றியக் குழுவின் தலைவர் மலர்க்கொடி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலை பண்பாட்டுத்துறையின் காஞ்சிபுரம் மண்டல இணை இயக்குநர் ஹேமநாதன் வரவேற்று பேசினார்.முன்னதாக கலைத் திருவிழாவை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் முரசு அடித்து தொடக்கி வைத்தார்.
கலைத் திருவிழாவில் பொய்க்கால் குதிரை மற்றும் மயில், பரதநாட்டியம், தப்பாட்டம், கரகாட்டம், துடும்பாட்டம் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
2வது நாளாக இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையிலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கலை பண்பாட்டுத்துறை சார்பில் இரு நாட்கள் காஞ்சிபுரம் சங்கமம் என்ற பெயரில் நடைபெறுகிறது.
இன்றும் 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தும் கலைத்திருவிழா நடைபெறுகிறது.
பொதுமக்கள் இக்கலைநிகழ்ச்சிகளை இலவசமாக பார்க்க கலை பண்பாட்டுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.


No comments
Thank you for your comments