Breaking News

நடிகை கஸ்தூரி மீது தமிழ்நாடு கம்ம நாயுடு எழுச்சி பேரவையின் சார்பில் புகார் மனு.!

கோவை மாவட்டம் தமிழ்நாடு கம்ம நாயுடு எழுச்சி பேரவையின் சார்பில் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அவர்களிடம் தமிழ்நாடு ரெட்டி நல சங்கம் மாநில பொதுச் செயலாளர் ஜனகராஜ் தலைமையில் தமிழ்நாடு கம்ம நாயுடு எழுச்சி பேரவை மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீமான் சுந்தரம் முன்னிலையில் புகார் மனு அளித்தனர்.



அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: சென்னையில் நடைபெற்ற இந்து மக்கள் கட்சி கூட்டத்தில் நடிகை கஸ்தூரி 300 வருடங்களுக்கு முன்னால் ஒரு ராஜாவின் அந்தப்புர பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தெலுங்கர்கள் என்று தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் பல்வேறு தரப்பு தெலுங்கு மொழி பேசும் மக்களை அந்தபுரத்து சேவகர்கள் என்று அவதூறு பேசி இழிவுபடுத்தியுள்ளார். இது பல்வேறு செய்தி தொலைக்காட்சி சேனல்கள், சமூக ஊடகங்களில் பரவி எங்கள் இனத்தவரை வேதனைபடுத்துகிறது எதிர்காலத்தில் இது போன்று வேறுயாரும் தனி நபரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரையோ இழிவுபடுத்தக்கூடாது.தமிழ்நாட்டில் 2கோடி தெலுங்கு மொழி பேசும் மக்களை அவதூறு பேச்சுகளால் இழிவுபடுத்தி தமிழ்நாட்டின் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய நடிகை கஸ்தூரி மீது உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளதாக கூறினார்.



இந்நிகழ்வில் தமிழ்நாடு கவர நாயுடுகள் நலச்சங்கம் டாக்டர் ஜி. கிருஷ்ணராஜ், தேவாங்கர் சமூக நல இயக்கம் ஜெயபால்,மற்றும் நாகராஜன் ஜெயக்கண்ணன் வெங்கடேஷ் வேல்முருகன் தேவராஜ் நாகராஜன் ஆதிநாராயணசாமி சந்திரசேகர், ஒத்தக்கால்மண்டபம் ரவி,ஈச்சனாரி நரேந்திரன் உட்பட முக்கிய நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments