Breaking News

காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் கண் சிகிச்சை முகாம்


காஞ்சிபுரம், நவ.18:

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி வளாகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி கண் சிகிச்சை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் 71 வது ஆண்டினையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி அலுவலக வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமினை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆ.க.சிவமலர் தொடக்கி வைத்து பார்வையிட்டார். கூட்டுறவுச் சங்கங்களுக்கான காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார்.

வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர் அ.வெங்கட்ரமணன் வரவேற்று பேசினார்.

மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியும்,டாக்டர்.அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்தி கண் சிகிச்சை முகாமில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்புரை, கண்ணீல் நீர் வடிதல் உள்ளிட்ட குறைபாடுகளுக்கு மருத்துவக் குழுவினர் கண் பரிசோதனைகளும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கினார்கள்.

வங்கியின் பொது மேலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.முகாமில் நெசவாளர்கள், பொதுமக்கள் உட்பட மொத்தம் 152 பேர் பயன்பெற்றனர். 

கூட்டுறவுத்துறை சார்பில் கண் சிகிச்சை முகாம் வளத்தோட்டம்,திருவள்ளுவர் குடியிருப்பு பகுதி ஆகிய இடங்களிலும் நடைபெற்றது.

No comments

Thank you for your comments