காஞ்சிபுரத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்
காஞ்சிபுரம், நவ.18:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காவலான் கேட் பகுதியில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற தர்ணா போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் ஜெ.தாமஸ் இளங்கோவன் தலைமை வகித்தார்.
மாவட்ட இணைச் செயலாளர்கள் ஏ.திருமலை,எம்.முனியம்மாள், டி.கன்னியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தநர்.
துணைத் தலைவர் வி.குமார் வரவேற்று பேசினார்.தமிழ்நாடு ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் வி.ரவிக்குமார் தர்ணா போராட்டத்தை தொடக்கி வைத்து பேசினார்.
சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வி.தணிகைமணி,மாவட்டப் பொருளாளர் கு.மாணிக்கம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
சங்க மாநில துணைப் பொதுச் செலாளர் பி.எல்.சுப்பிரமணியம் நிறைவுரை நிகழ்த்தினார். துணைத் தலைவர் பி.மல்லிகா நன்றி கூறினார்.
குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.6750 வழங்க வேண்டும்,குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்,இலவச பஸ்பாஸ் மற்றும் இலவசமாக மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
No comments
Thank you for your comments