ரூ.2.60 லட்சம் வாடகை பாக்கி,காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான வாடகை வீடு மீட்பு
காஞ்சிபுரம், நவ.18:
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகில் மேற்கு மாட வீதியில் வசித்து வந்தவர் சீனிவாசன் மகன் ராமச்சந்திரன். இவர் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள வீட்டில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.
கோயிலுக்கு கொடுக்க வேண்டிய வாடகையை தொடர்ந்து பல ஆண்டுகளாக கொடுக்காமல் இருந்து வந்ததால் வாடகை நிலுவையாக ரூ.2.60லட்சம் வரை இருந்து வந்தது.
வாடகைத் தொகையை பலமுறை கேட்டும் கொடுக்காததால் அறநிலையத்துறை காஞ்சிபுரம் மண்டல உதவி ஆணையர் கார்த்திகேயன்,கோயில் செயல் அலுவலர் ச.சீனிவாசன்,கோயில் நிர்வாகி பத்ரி நாராயணன் ஆகியோர் திடீரென ராமச்சந்திரன் வீட்டில் வாடகை கொடுக்காததால் வீட்டை காலி செய்யுமாறு வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து வீட்டிலிருந்த பீரோ,பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வெளியில் கொண்டு வந்து லாரியில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் ராமச்சந்திரனிடம் கொடுத்து அனுப்பினார்கள்.
பின்னர் வீட்டினை பூட்டி சீல் வைத்தனர்.இந்த நிகழ்வின் போது அறநிலையத்துறை செயல் அலுவலர்கள்,ஆய்வாளர்கள்,காமாட்சி அம்மன் கோயில் பணியாளர்கள் பலரும் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments