Breaking News

வேலூர் : பத்திரப்பதிவில் நிழலாடும் முறைகேடுகள்?

 வேலூர்,  நவ.27-

வேலூர் சார்பதிவாளர் அலுவலகம் பரவலாக பரவியுள்ள லஞ்ச பேரற்றுக்கும், அதிகார விரோத பயன்பாட்டுக்கும் ஒரு நிழல் போல மாறி வருகிறது. பலமுறை லஞ்ச ஒழிப்புதுறை சோதனைகளில் தடுக்கப்பட்டும், அலுவலகத்தின் லஞ்ச தொடர்பான செயல்பாடுகள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. சமீப காலமாக, இந்த பத்திரப்  பதிவு அலுவலகங்களில் புரோக்கர்கள் மற்றும் உரிமம் இல்லாத ஆவணம் எழுத்தர்கள் நடமாட்டமும் அதிகரித்து காணப்படுகிறது,  குறை மதிப்பீடு பத்திரம் பதிவதாகவும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பல்வேறு கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். 


தமிழகத்திலே அதிக அளவு லஞ்ச லாவண்யம் நடைபெற்று வரும் அரசு அலுவலங்களில் முதன்மையானது பத்திரப்பதிவு அலுவலகம். இந்த  பத்திரப்பதிவு அலுவலகங்களில் புரோக்கர்கள் குறுக்கீடு அதிக அளவில் இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் தொடாந்து கூறப்பட்டு வருகிறது.

இந்த புரோக்கர்கள் மூலமே சொத்துக்கள் விற்பனை, தானம், ஒப்பந்தம் போன்ற பதிவுகள் நடைபெற்று வருகிறது. இவர்களுடன் அந்த அலுவலக  ஊழியர்கள் மற்றும் சார்பதிவாளர் கூட்டணி வைத்துக்கொண்டு, ஆவனங்கள் பதிவு செய்ய அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் தவிர, சுய லாப கட்டணமும் அதிக அளவு வசூலிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் நீண்ட நாளாக வலுத்துவருகின்றன.

இதன் காரணமாக சாமானிய மக்கள் தங்களது சொத்துக்களை விற்கவோ, வாங்கவோ பத்திர பதிவு செய்ய இயலாமல் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள்.

இதுகுறித்து, தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் இடைத்தரகர்கள் குறுக்கிட்டால், அந்த அலுவலகத்தின் சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்று பதிவுத்துறை ஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இருப்பினும்  புரோக்கர்கள் அட்டூழியமும், லஞ்சமும் ஒழிந்தபாடு இல்லை. அவ்வபோது  லஞ்ச ஒழிப்புத்துறையினரும் சோதனை செய்கின்றனர். அச்சோதனையில் லட்சங்களில் பணம் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாக உள்ளது. 

இருப்பினும் பதிவுத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் சார்பதிவாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை புதுயுத்தி கையாண்டு லஞ்சம் வாங்குகின்றனர் என்பதுதான் நிதர்சனம். 

இதற்கு வேலூர் சார்பதிவாளர் அலுவலகமும் விதிவிலக்கல்ல.... 

வேலூரில்  ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.  இந்த அலுவலகத்தில் சார்பதிவாளராக  பிரகாஷ்(பொ) என்பவர் தற்போது பணியாற்றிவருகிறார்.

வேலூர்  மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து, சொத்துக்கள் வாங்க, விற்பனை செய்ய, பத்திரப்பதிவு பணிக்காக நாள்தோறும், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர். 

Thiru P. Moorthy 
Minister for Commercial Taxes and Registration

குற்றச்சாட்டுகள் :

சமீப காலமாக, இந்த பத்திரப்  பதிவு அலுவலகங்கத்தில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக கூறப்படுகிறது.

வேலூரில்  ஒருங்கிணைந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவில் அதிகளவில் மோசடிகள் நடப்பதாகவும்,   நில ஆவணங்களில் போலியாக திருத்தங்கள் செய்து பதிவு செய்வதாகவும், பத்திரப்பதிவு செய்ய வருவோரிடம் லஞ்சம் வாங்குவதாகவும் ஏராளமான புகார்கள் வலுத்துவருகின்றன.

திட்டமிடப்படாத மனைகள் அனுமதியற்ற பத்திரபதிவு பெருமளவில் நடைபெற்று வருவதாகும் குற்றச்சாட்டுக்கள் முன்வைத்துள்ளனர். 

பத்திரப்பதிவு செய்ய, முத்திரைத்தாள் கட்டணத்துக்கு ஏற்ற வகையில், கமிஷன் கொடுத்தால்தான் பத்திரப்பதிவு செய்வார்கள் என கூறி பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர் என்றும் சமூக ஆர்வலர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.  

 வேலூர் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் சார் பதிவாளராக  பிரகாஷ்(பொ) சுமார் ஒரு வருட காலமாக பணியாற்றிவருகிறார். இந்த குறுகிய காலத்தில் பல லட்சங்கள் லஞ்சமாக பெற்று  சுயலாபம் அடைந்துள்ளார் என்றும், புரோக்கர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்றும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். இதுகுறித்து சார்பதிவாளர் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்... 

அனைத்து முறைகேடுகளுக்கு அகராவரத்தை சேர்ந்த தமிழ் கடவுள் பெயரை கொண்ட  ஒருவர் வாயிலாகதான் பேச்சுவார்த்தை நடைபெற்று, பணப் பரிமாற்றம் நடைபெற்று வருவதாக பரவலாக பேசப்படுகிறது..!  அதுமட்டுமின்றி சில ரியல் எஸ்டேட் புரோக்கர்களுடனும், சில ஆவண எழுத்தர்களுடன் கூட்டணி வைத்து செயலாற்றுவதாகவும், முத்திரைதாள் குறை மதிப்பீடு செய்து பத்திரப்பதிவு நடைபெறுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். 

தனது சுயலாபத்துக்காக அரசுக்கு வருவாய் இழுப்பை ஏற்படுத்துகின்றனர். இதனால் அப்பாவி மக்களின் வரியை திருடவதாகும் என்று சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்... 


Thiru.Dinesh Ponraj Oliver, IAS.,
Inspector General of Registration


இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது,  

சார்பதிவாளர் அலுவலகங்களிலும், முத்திரைத்தாள் கட்டணத்துக்கு ஏற்ற வகையில், கமிஷன் கொடுத்தால் மட்டுமே, பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. இல்லையென்றால், ‘சர்வர்’ கோளாறு என கூறி, பத்திரப்பதிவை தள்ளி போடுகின்றனர். 

பத்திரப்பதிவு செய்ய டோக்கன் பெறுவதற்கு கூட, கமிஷன் கொடுத்தால் தான் கிடைக்கிறது. ஆவண எழுத்தர்கள் என கூறி கொண்டு, பத்திரப்பதிவு அலுவலகங்களில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவர்கள்தான், நாள்தோறும் நடக்கும் பத்திரப்பதிவை நிர்ணயம் செய்கின்றனர். 

ஒவ்வொரு பத்திர பதிவுக்கும், சார்பதிவாளர் முதல் அலுவலக ஊழியர்கள் வரை பணம் தர வேண்டும் என ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக கேட்கின்றனர் என்று குற்றச்சாட்டியுள்ளனர்.

ஆவண எழுத்தர்கள் அல்லாத, சார்பதிவாளர்கள், அலுவலக ஊழியர்கள் மூலம், பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடமாடும் புரோக்கர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலும், வேலூர்  லஞ்ச ஒழிப்பு போலீசார், சார்பதிவாளர் அலுவலகங்களில், திடீர் சோதனை நடத்தி, அரசு அலுவலர்கள், புரோக்கர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

கடந்த 10 மாதங்களாகதான் இதுபோன்ற முறைகேடுகள் அதிகமாக உள்ளது என்று பொதுமக்களும்,  சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டியுள்ளனர். 

மிரட்டல் :

இவர் மீது பல்வேறு புகார்கள் வரபெற்றதை குறித்து  செய்தியாளர் பொதுவெளியில் விசாரித்து தகவல் சேகரித்ததை அறிந்த சார் பதிவாளர்  பிரகாஷ்(பொ), பணப் பலத்தையும், அரசியல் பலத்தையும், ஆட்கள் பலத்தையும் கொண்டு செய்தியை வெளியிடாமல்  முடக்குகின்றார். 

இந்த செயலே இவரது விதிமீறிய செயல்கள் எவ்வளவு இருக்கும் என்ற சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. 

பொதுமக்களின் புகார்களை செய்தி நிறுவனம் விசாரித்து அவர்களது கருத்துகளையும், குறைகளையும் வெளியிடுவது  பத்திரிகையின் மாண்பு. உண்மையின் குரல்வலை நசுக்கப்படுகிறது. இதுபோன்ற  மிரட்டல்களால் ஜனாநயாகம் படுகொடுலை செய்யப்படுகின்றது என்றுதான் கூறவேண்டும். 

வேலூர் சார்பதிவாளர் அலுவலகத்தை,  லஞ்ச ஒழிப்புதுறை கண்காணித்து கையும் களவாக பிடிக்கவேண்டும். 

அரசுக்கு அவப்பெயரையும், வருவாய் இழப்பையும் ஏற்படுத்தும் இதுபோன்றவர்கள் மீது, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் தனி கவனம் செலுத்தவேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும்  கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும், பத்திரப் பதிவுத்துறை தலைவர் துறை ரீதியான விசாரணை செய்து பணி நீக்கம் செய்யவேண்டும் என்றும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர். 

கடந்தகால பத்திரப்பதிவுகளின் ஆய்வு :

வேலூர் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக பணிபுரியும் பிரகாஷ் (பொ) குறித்த குற்றச்சாட்டுகள் பொதுமக்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் பரவலாக இருக்கின்றன. இதன் ஒரு முக்கியமான காரணமாக, அவருடைய பதவியில் இருந்த காலங்களில் நிகழ்ந்த பத்திரப்பதிவுகளின் போது முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இவரின் தலைமையிலான காலங்களில் பதிவு செய்யப்பட்ட அனைத்து பத்திரங்களையும் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பதிவுகளின் போது உரிய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பதையும், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய பத்திரங்கள் உள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டும்.

சிறப்பு குழு அமைத்தல் :

பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த முறைகேடுகளை ஆராய்வதற்கு அரசால் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட வேண்டும். பத்திரங்களில் மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த பத்திரங்களை உடனடியாக ரத்து செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்த ஆய்வுகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம், சாதாரண மக்கள் மீண்டும் அரசு அலுவலகங்களின் மீது நம்பிக்கை செலுத்தும் நிலையை உருவாக்க முடியும். மேலும், லஞ்சம் மற்றும் புரோக்கர்களை முற்றிலும் ஒழிக்க, துறை ரீதியான மாற்றங்களை அரசால் நிறைவேற்றுவது அவசியமாகிறது.

No comments

Thank you for your comments