Breaking News

துக்க நிகழ்வுக்கு சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த கதி - தாயும் 2 மகன்களும் உயிரிழப்பு

காஞ்சிபுரம், நவ.27:

காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் தாயும் அவரது இரு மகன்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


ராணிப்பேட்டை மாவட்டம் ஒச்சேரி பகுதியை சேர்ந்த சேட்டு மனைவி கஜலட்சுமி(40)இவரது மகன்கள் மதன்(20) மனோஜ்(18) மூவரும் இருசக்கர வாகனத்தில் துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். 

இவர்கள்காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் அம்பேத்கர் சிலை அருகே சென்ற போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி இவர்கள் மீது மோதியது.இந்த விபத்தில் தாயும் அவரது இரு மகன்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

சம்பவம் தொடர்பாக பாலுசெட்டி சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Thank you for your comments