Breaking News

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திமுக இளைஞரணி சார்பில் 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு

காஞ்சிபுரம், நவ.27:

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திமுக மாவட்ட இளைஞரணி சார்பில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் புதன்கிழமை பிறந்த 17 குழந்தைகளுக்கு கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான க.சுந்தர் தங்க மோதிரம் பரிசாக வழங்கினார்.




திமுக இளைஞரணி சார்பில் அதன் மாவட்ட அமைப்பாளர் அ.யுவராஜ் ஏற்பாட்டில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.



கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும்,உத்தரமேரூர் எம்எல்ஏவு மான க.சுந்தர் தலைமை வகித்து குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தையும், குழந்தைகளுக்கான புத்தாடைகளையும் வழங்கினார்.


இந்நிகழ்விற்கு காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,மாநகர செயலாளர் சி.கே.வி தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட சுகாதாரப்பணிகள் துறையின் இணை இயக்குநர் ஜி.சி.கோபிநாத், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் மற்றும் கட்சியின் பகுதி செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments