உல்லாசத்திற்கு அழைத்த அழகிகள் கைது!
கோவை மாநகரம் வடவள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பி.என் புதூர் பகுதியில் ஒரு வீட்டில் புரோக்கர்கள் மற்றும் மூன்று அழகிகள் உல்லாச விடுதி நடத்தி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணுவாய் சோமையம்பாளையம் பகுதியில் ரியல் எஸ்டேட் நடத்திவரும் பிரசன்னா என்பவர் சம்பவத்தன்று பி.என் புதூர் தில்லை நகர் குறுக்கு வீதி அருகில் முன்பின் தெரியாத சீனிவாசன் என்ற நபர் தன்னிடம் அறிமுகமாகி இப்பகுதியில் பெண் ஒருவர் மொபைல் சர்வீஸ் வீட்டில் நடத்தி வருவதாகவும் , மற்றொருவர் டெய்லரிங் கடை நடத்தி வருவதாகவும் இவர்களுக்கு வீடு, மற்றும் கடை தேவைப்படுவதாக கூறி அவரை ஒரு வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் அங்கு கிருஷ்ணவேணி என்பவர் தன்னை அறிமுக செய்து உல்லாச விடுதி நடத்துவதாகவும் ரூ1500 கொடுத்தால் உல்லாசம் அனுபவிக்கலாம் என்று கூறினார். மேலும் அந்த இல்லத்தில் மகாலட்சுமி,ராதாமணி, கீதா என மூன்று அழகிகளை அழைத்து ரூ1500 கொடுத்தால் இதில் யாருடன் வேண்டுமானாலும் உல்லாசம் அனுபவிக்கலாம் என்று கூறியுள்ளார்.
பிரசன்னா ஏடிஎம் மில் பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு வடவள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில் வடவள்ளி காவல்நிலைய ஆய்வாளர் பிராங்கிளின் தலைமையில் போலிசார் விசாரணை மேற்கொண்டு புரோக்கர்கள் மற்றும் மூன்று அழகிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.


No comments
Thank you for your comments