வங்கி கணக்கில் போலி டிடி - போலி ஆவண தடுப்பு பிரிவு விரைவான நடவடிக்கை - குற்றவாளிகள் கைது
எச்.டி.எஃப்.சி வங்கி கிளை மேலாளர் புகாரின் அடிப்படையில் போலி ஆவண தடுப்பு பிரிவு விரைவான நடவடிக்கை எடுத்தது.
மத்திய குற்றப்பிரிவு போலி ஆவண தடுப்பு பிரிவு, துரிதமாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ததற்காக, காவல் ஆய்வாளர் மற்றும் குழுவினருக்கு ஆவடி காவல் ஆணையாளர் பாராட்டு தெரிவித்தார்
செங்குன்றம் எச்.டி.எஃப்.சி வங்கி கிளை மேலாளர் டெரிக் லோஸ்லி 04.07.24-ல் கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில் போலி ஆவண தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.
மனுதாரர் செங்குன்றம் எச்.டி.எஃப்.சி வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த வங்கியில் செங்குன்றம் அண்ணா தெருவை சேர்ந்த சந்துரு த/பெ தங்கவேல் என்பவர், தனது எச்.டி.எஃப்.சி வங்கி கணக்கில் ரூ.1,47,22,137/- மதிப்புள்ள State Bank of India டிமாண்ட் டிராஃப்ட் தாக்கல் செய்தார்.
அன்றே செங்குன்றம் கிளை, இந்த டிராஃப்ட்டை கிளியரிங் செய்ய மைலாப்பூர், ஆர்.கே.சாலை எச்.டி.எஃப்.சி வங்கிக்கு அனுப்பியது. பரிசோதனைக்குப் பிறகு, டிராஃப்ட் போலியானது என கண்டறியப்பட்டது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலி ஆவண தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட் மேரி விசாரணை மேற்கொண்டார்.
ஆவடி காவல் ஆணையாளர் கே.சங்கர் மற்றும் துணை ஆணையாளர் பி.பெருமாள் ஆகியோரின் உத்தரவின் பேரில், தலைமறைவாக இருந்த சந்துரு மற்றும் குணசேகரன் ஆகியோர் 12.11.2024 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மத்திய குற்றப்பிரிவு போலி ஆவண தடுப்பு பிரிவு, துரிதமாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ததற்காக, காவல் ஆய்வாளர் மற்றும் குழுவினருக்கு ஆவடி காவல் ஆணையாளர் பாராட்டு தெரிவித்தார்

No comments
Thank you for your comments