Breaking News

காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் ஆய்வு ஆய்வு

காஞ்சிபுரம், நவ.9:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


காஞ்சிபுரம் வித்யா சாகர் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லத்தினை ஆட்சியர் பார்வையிட்டு அங்கு கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கற்பிக்கப்படும் கற்றல் முறைகளை கேட்டுத் தெரிந்து கொண்டார்.

பின்னர் காஞ்சிபுரம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள விளையாட்டு வீராங்கனைகள் தங்கும் விடுதியினை பார்வையிட்டு அங்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை மையத்தினை பார்வையிட்டார்.

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடையாள அட்டை பெறா மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றிதழுடன் கூடிய தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக நடத்தப்பட்டு வரும் சிறப்பு முகாமையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுடன் வருபவர்கள் அமருவதற்காக கட்டப்பட்டு வரும் கூடத்தினையும் ஆட்சியர் பார்வையிட்டு அப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

பின்னர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு கட்டண வசதியுடன் கூடிய புனரமைக்கப்பட்ட சிகிச்சை மையத்தினையும் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன்,நிலைய மருத்துவ அலுவலர் பாஸ்கரன்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரா.மலர்விழி ஆகியோரும் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments