காஞ்சிபுரம் மாநகராட்சியில் 45.75 லட்சம் மதிப்பிலான பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார் எம்எல்ஏ எழிலரசன்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் பல்வேறு திட்டத்தின் கீழ் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 27வது வார்டு நத்தப்பேட்டை மற்றும் 29வது வார்டு வேகவதி தெரு ஆகிய பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி மற்றும் 24வது வார்டு வி.என்.பெருமாள் கோவில் தெரு பகுதியில் புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்டும் பணி என 45.75 லட்சம் மதிப்பிலான பணிக்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் கலந்து கொண்டு பணிகளையும் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் மேயர் மகாலட்சுமி யுவராஜ், பொறியாளர் கணேசன், மண்டல குழு தலைவர் சந்துரு, மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

.jpg)
.jpg)
No comments
Thank you for your comments