மண்பாண்ட தொழிலாளர்களுக்கான குறைதீர்வு நாள் கூட்டம் !
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மண்பாண்ட தொழிலாளர் களுக்கான குறைதீர்வு கூட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரமணி,ம த்தியஅரசின் ஜவுளித்துறை மண்டல உதவி இயக்குநர் திஅப்லாஅசன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பாலாஜி, மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments