அஞ்சலகங்களில் உயிர்வாழ்வுச்சான்று பெற 3 நாட்களே உள்ளன - கண்காணிப்பாளர் தகவல்
காஞ்சிபுரம், நவ.27:
![]() |
| பயனாளிக்கு உயிர்வாழ்வுச் சான்றினை வழங்கிய தலைமை அஞ்சலக அதிகாரி எஸ்.பாலாஜி |
காஞ்சிபுரம் தலைமை அஞ்சலக அலுவலகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு உயிர்வாழ்வுச் சான்று வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.அருள்தாஸ் கூறியது..
அரசுத்துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் அனைவரும் நவம்பர் மாதத்தில் அவரவர்கள் பணிபுரிந்த அலுவலகங்களுக்கு சென்று உயிர்வாழ்வு சான்று சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.ஓய்வூதியர்களின் நலனுக்காக அவரவர் வீடுகளுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களில் ரூ.70 கட்டணமாக செலுத்தி உயிர்வாழ்வுச் சான்றினை பெற்றுக் கொள்ளலாம்.
இதற்காக பணிபுரிந்த அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.ஆதார் எண்,கைபேசி எண், ஓய்வூதிய கணக்கு எண் இவற்றைக் கொடுத்து 5 நிமிடங்களில் உயிர்வாழ்வு சான்று பெற்றுக் கொள்ளலாம். இதுவரை காஞ்சிபுரத்தில் 1811 நபர்கள் அஞ்சலகங்கள் மூலமாக உயிர்வாழ்வுச் சான்று பெற்றுள்ளனர்.
நவம்பர் மாதம் நிறைவு பெற இன்னும் 3 நாட்களே இருப்பதால் ஓய்வூதியர்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.அஞ்சலகங்களில் ஆண்டு ஒன்றுக்கு ரூ.600 மட்டும் செலுத்தி விபத்துக்காப்பீட்டு பாலிசி எடுத்துக் கொள்ளலாம்.
விபத்தில் உயிரிழப்பு நேர்ந்தால் ரூ.10 லட்சம் வரை காப்பீடு செய்தவர்களின் வாரிசுதார்களுக்கு அஞ்சல்துறை வழங்குகிறது.ரூ.750 பிரிமியமாக செலுத்தினால் ரூ.15லட்சம் வரை வழங்கப்படுவதாகவும் எஸ்.அருள்தாஸ் தெரிவித்தார். முன்னதாக காஞ்சிபுரம் தலைமை அஞ்சலக அதிகாரி எஸ்.பாலாஜி பயனாளிக்கு உயிர் வாழ்வுச் சான்றினை வழங்கினார்.

No comments
Thank you for your comments